Breaking News

FACT CHECK ஆண்களும் பெண்களும் கலந்து தொழுகை, தொழுகை நேரத்தில் செல்பி என பரவும் வீடியோ !!! உண்மை என்ன???

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஆண்களும் பெண்களும் கலந்து தொழுகை, தொழுகை நேரத்தில் செல்பி வேற , மார்க்கம் எங்கு செல்கின்றது என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் ஒரு பள்ளி வாசலில் தொழுகைக்கு முன்பாக இகாமத் சொல்லப்படுகின்றது, அப்போது ஆண்கள் பெண்கள் என அனைவரும் அந்த தொழுகையில் கலந்து நிற்கின்றார்கள்

மேலும் அதில் ஒரு பெண்மணி, தொழுகைக்காக வரிசையில் நிற்க்கும் போது தனது மொபைல் போனில் செல்பி எடுக்கின்றார்

இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகின்றார்கள்

அந்த வீடியோ எங்கு நடந்தது என  அட்மின் மீடியா தேடியதில்

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 26.04.2022 அன்று பாகிஸ்தானில் நடந்தது ஆகும்

ஆனால் சிலர் அந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback