Breaking News

BREAKING பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு- மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்


மேலும் இந்த விலை குறைப்பின் மூலமாக மத்திய அரசுக்கு கலால் வரியின் மூலம் கிடைக்கக்கூடிய 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 

பெட்ரோல் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback