Breaking News

ஆதார் ஜெராக்ஸை யாருக்கும் கொடுக்க வேண்டாம் - மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

எந்தவொரு நிறுவனங்களுக்கும் ஆதார் நகல்களை தரவேண்டாம் எனவும் மேலும் முன்பின் தெரியாத  பொது இடங்களில் ஆதாரினை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.என தேவைபட்டால் கடைசி நான்கு இலக்கங்கள் கொண்ட மாஸ்க் ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தல் செய்துள்ளது

 

 


 ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  நீங்கள் கொடுக்கும் ஆதார் நகலை அந்த நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. அதேசமயம் தவிர்க்க முடியாத பட்சத்தில் பொது மையங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்த பின் குறிப்பிட்ட கோப்பையை அழிப்பது அவசியம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

மாஸ்க் ஆதார் என்றால் என்ன:- 

 

மாஸ்க் ஆதார் கார்டு என்பது ஆதார் கார்டில் உள்ள ஆதார் நம்பரை ரகசியமாக வைப்பதாகும். 

இந்த மாஸ்க் ஆதார் கார்டில் உள்ள கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும். மற்ற எண்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும். ஆரம்பத்தில் உள்ள 8 இலக்கங்களிலும் ’X' என்ற குறியீடுதான் இருக்கும். அதில் இருக்கும் இலக்கங்கள் என்ன என்பதை யாராலும் பார்க்க முடியாது

இந்த மாஸ்க் ஆதார் கார்டை டவுன்லோடு செய்வதற்கு ஆதாரின் இணையதளத்தில் டவுன்லோடு செய்யும் முன் அதில் வழக்கமான ஆதார் வேண்டுமா அல்லது மாஸ்க் ஆதார் வேண்டுமா என்று தேர்வு செய்ய வேண்டும்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback