Breaking News

பஞ்சாப் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து -வீடியோ

அட்மின் மீடியா
0

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று அமிர்தசரஸ். இங்கு குருநானக்தேவ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பெரியளவில் பரவும் முன்னரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 650 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைப்புத்துறை அதிகாரி லவ்ப்ரீத் சிங் கூறியபோது, எட்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார். தகவல் அறிந்து 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்



வீடியோ பார்க்க:-

https://twitter.com/sujitnewslive/status/1525434857593393153

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback