ஆதார் அட்டை ஜெராக்ஸை எங்குக் கொடுக்காதீங்க என்ற உத்தரவு வாபஸ்
ஆதார் அட்டை நகலை எங்கும் வழங்க வேண்டாம் என்ற அறிவிப்பை 'திரும்பப் பெற்றது' இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம்
எந்தவொரு நிறுவனங்களுக்கும் ஆதார் நகல்களை தரவேண்டாம் எனவும் மேலும் முன்பின் தெரியாத பொது இடங்களில் ஆதாரினை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.என தேவைபட்டால் கடைசி நான்கு இலக்கங்கள் கொண்ட மாஸ்க் ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தல் செய்திருந்தது இந்நிலையில் திடிரென ஆதார் அட்டை நகலை எங்கும் வழங்க வேண்டாம் என்ற அறிவிப்பை 'திரும்பப் பெற்றது' இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம்
ஆதார் ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், இந்த சுற்றறிக்கையின் மூலம் தவறான புரிதலுக்கும், தவறாக விளக்கம் அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக திரும்பப் பெறுவதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் (சாதாரண எச்சரிக்கையுடன்) பயன்படுத்தலாம் எனவும் கூறி உள்ளது.
மாஸ்க் ஆதார் என்றால் என்ன:-
மாஸ்க் ஆதார் கார்டு என்பது ஆதார் கார்டில் உள்ள ஆதார் நம்பரை ரகசியமாக வைப்பதாகும்.
இந்த மாஸ்க் ஆதார் கார்டில் உள்ள கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும். மற்ற எண்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும். ஆரம்பத்தில் உள்ள 8 இலக்கங்களிலும் ’X' என்ற குறியீடுதான் இருக்கும். அதில் இருக்கும் இலக்கங்கள் என்ன என்பதை யாராலும் பார்க்க முடியாது
இந்த மாஸ்க் ஆதார் கார்டை டவுன்லோடு செய்வதற்கு ஆதாரின் இணையதளத்தில் டவுன்லோடு செய்யும் முன் அதில் வழக்கமான ஆதார் வேண்டுமா அல்லது மாஸ்க் ஆதார் வேண்டுமா என்று தேர்வு செய்ய வேண்டும்.
Tags: இந்திய செய்திகள்