மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை -காவல் ஆணையர் எச்சரிக்கை
மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
ரூட்டு தல பிரச்சனையில் சென்னை கல்லூரி மாணவர்கள் நேற்று மோதிக் கொண்டதால்,இனி வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுவர் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்...
சென்னையில் ரூட்டு தல பிரச்சனை தொடர்பாக நேற்று 3 சம்பவம் நடைபெற்றுள்ளது.இதில் மாணவர்கள் மீதே தவறு உள்ளது.மேலும்,அறிவுரை கூறியும் பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி வருகின்றனர்.குறிப்பாக அரசு ஊழியர்களையும் தாக்கி வருகின்றனர்.இதனால்,சக பயணிகளுக்கு இடையூறாக உள்ளது.எனவே,இனி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்களை காவலர்கள் தாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது.
Tags: தமிழக செய்திகள்