ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.!! முழு விவரம்...
ரயில் பயணம் செய்பவர்களில் பலரும் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலமே முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது இந்திய ரயில்வே
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும் எனவும் வெரிஃபிகேஷனை பூர்த்தி செய்யாமல் உள் நுழைபவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
அதற்க்கு முதலில் ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளத்திற்குள் லாகின் செய்யுங்கள்.
அடுத்து அதில் மை அக்கவுண்ட் சென்று அதில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
அதன் பின்னர் மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு வந்த ஓடிபி விவரங்களை பதிவிடுங்கள்
அதன் பின்னர் நீங்கள் ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி