வரலாற்று சிறப்பு மிக்க பேரறிவாளன் விடுதலை – தீர்ப்பு வெளியீடு!! படிக்க!! டவுன்லோடு செய்ய
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் 142வது அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது . பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ளது.
இந் நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து பிறப்பித்த 29 பக்க தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு நகல் டவுன்லோடு செய்ய:-
https://drive.google.com/file/d/1nvwvo2mRUSAd3bqUbb1MRfNm_yqRPF98/view?usp=sharing
தீர்ப்பு பார்க்க & படிக்க:-
Tags: தமிழக செய்திகள்