Breaking News

வெளிநாட்டினர் அனுமதியின்றி மக்காவிற்குள் நுழைய தடை..!! முழு விவரம்

அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அனுமதியின்றி புனித நகரமான மெக்காவிற்குள் இந்த வருட ஹஜ் சீசன் முடியும் வரைநுழைய தடை விதிக்கப்படுவதாக சவூதி அரசு அறிவித்துள்ளது. 





மேலும் உம்ரா மற்றும் ஹஜ் அனுமதிகளை வைத்திருப்பவர்கள் மற்றும் மக்காவில் பணிபுரிய நுழைவு அனுமதி பெற்றவர்கள் மற்றும் மக்காவிலிருந்து வழங்கப்பட்ட இகாமா வைத்திருக்கும் வெளிநாட்டினர் போன்றவர்களுக்கு மட்டுமே இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் எனும் புனித யாத்திரையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவூதியின் பொது பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சமி முகமது அல் ஷுவைரேக் தெரிவித்துள்ளார்.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback