Breaking News

பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு- புதிய கட்டண விவரம்...

அட்மின் மீடியா
0
பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவிப்பு

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (AICTE) நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் வரும் கல்வி ஆண்டு முதல்  இந்த புதிய கட்டணங்களை அமல்படுத்த வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரைத்துள்ளது.
 
 
இதன்படி பி.இ., (B.E) பி.டெக்.,(B.Tech) பி.ஆர்க்.,(B.Arch) உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
 
இதே போல், டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.67,900 முதல் அதிகபட்சம் ரூ.1,40,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback