Breaking News

அடுத்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளி விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ்

அட்மின் மீடியா
0

 அடுத்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளி விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ்

 

தமிழகத்தில் 2022-2023 கல்வி ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு 

இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவ்ர்கள் செய்தியாளர் சந்திப்பில் 

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் , பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். 

அதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கும் , 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 13ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று அவர் அறிவித்துள்ளார். 

அதேசமயம் வரும் கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போலல்லாமல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2022 - 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback