Breaking News

தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் இன்று மாணவர்கள் தேர்வு

அட்மின் மீடியா
0

சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன



இந்நிலையில் 1 லட்சம் இடங்களுக்கு அதற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

ந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்திற்கு மாணவர்கள் இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். 

கட்டாய கல்வி உரிமை திட்டத்தில் 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்த நிலையில், சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback