இலங்கை முழுவதும் கலவரம் வெடித்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு!
அட்மின் மீடியா
0
இலங்கையின் குருநாகலிலுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அரசியல்வாதிகளின் வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இலங்கையின் குருனகாலாவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் அதிபரின் வீட்டை அடித்து நொறுக்கி, தீவைத்துக் கொளுத்தினர். தொடர்ந்து, பல அரசியல்வாதிகளின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர்இதுவரைக்கும் போராட்டக்காரர்கள் சுமார் 30 அரசியல் வாதிகளின் வீடுகளை எரித்துள்ளார்கள் என கூறப்படுகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்