கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 அடிப்படை உதவித்தொகையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் வழங்கி தொடங்கிவைத்தார்.
பிரதமர் கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவக் காப்பீடு வசதி வழங்கப்பட உள்ளது.
கொரேனாவுக்கு தங்களது பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளின் உயர்கல்விக்கும், தொழில்முறை கல்விக்கும் உதவும் நோக்கத்தில் மாதந்தோறும் ரூ.4,000 நிதியுதவி PM CARES திட்டத்தின் கீழ் அளிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையும் குழந்தைகள் 23 வயதை பூர்த்தி செய்திருக்கும்போது சுகாதார காப்பீடு மற்றும் உதவித்தொகை உள்பட ரூ.10 லட்சம் அரசு சார்பில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்