Breaking News

சட்டென மாறிய வானிலை அடுத்த 3 மணி நேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த மழை மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில் இதற்கு அசானி என்று பெயரிடப்பட்டது. இந்த அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் தீவிரமடைந்த நிலையில் மேற்கு வங்கம், ஒரிசா பகுதியில் தீவிர மழை பெய்தது. இந்நிலையில் தான் அசானி புயலானது தற்போது ஆந்திராவை நோக்கி நகரந்துக்கொண்டிருப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.கள்ளகுறிச்சி, கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்னும் ஒருசில மணி நேரத்தில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback