Breaking News

ஒரு லோகோ உருவாக்குங்க ரூ.1,50,000 பரிசை வெல்லுங்க...மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, வடகொரியா, தென்கொரியா உள்பட வளர்ச்சியடைந்‌த 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது இந்தியாவின் ஜி20 பிரசிடென்சிக்கான லோகோ வடிவமைப்பு போட்டியை வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) தொடங்கியுள்ளது.




ஜி20  என்றால் என்ன:-

அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ,அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் துருக்கி இந்த நாடுகளின் கூட்டமைப்பே ஜி-20 நாடுகள் ஆகும்

ஜி-20 உறுப்பு நாடுகளும் தங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களை இந்த மாநாட்டில் பேசுவார்கள். 

அந்த நாடுகளுடைய உறுப்பினர்கள் கொண்டுவரும் பெரிய திட்டங்களுக்கும் இங்கு விவாதிக்கப்படும் . 

மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் இந்த மாநாட்டில் கேட்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். 

இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்தில், ஒரே நாடே நடத்தாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான அனைத்து G20 சந்திப்புகளை நடத்த வேண்டும். இந்த தலைவர் நாடு நினைத்தால் G20-ல் உறுப்பினராக இல்லாத நாடுகளைக் கூட விருந்தாளிகளாக அழைக்கலாம். 

.

லோகோவில் இடம்பெற்று இருக்க வேண்டியவை


இந்தியாவின் ஜி20 கருப்பொருள் முன்னுரிமைகள் லோகோவில் ஹைலைட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். 

தேசிய கொடியின் மூவர்ணத்தை கொண்டு கலை வெளிப்பாடுகள் இடம்பெற்றிருக்க வேண்டும், 

லோகோ முக்கியமாக ஜி20 ஐ பிரதிபலிக்க வேண்டும்.

லோகோவில் இந்தியாவின் வளமான கலாச்சாரம், தத்துவம் மற்றும் பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் தேசிய சின்னங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அல்லது பிரதிபலிக்கும் சின்னங்கள் இருக்கலாம். 

லோகோ வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் உரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் 

பரிசு தொகை:-

இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் வெற்றியாளருக்கு ரூ.1,50,000ம், 

அடுத்த ஐந்து சிறந்த பதிவுகளுக்கு தலா ரூ.15,000ம், 

அடுத்த ஐந்து பதிவுகளுக்கு தலா ரூ.10,000ம் வழங்கப்படும். 


லோகோக்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:-

07.06.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://www.mygov.in/task/logo-design-contest-g20-presidency-india/

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback