இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிலை கண்ணீர்விட்டு அழுத அசாதுத்தீன் ஒவைசி- வீடியோ
ஹைதரபாத் நிஜாமுத்தீன் மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின்போது உரையாற்றிய ஐதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசி, இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிலையை எண்ணி கண்ணீர் விட்டு வேதனை அடைந்தார்
ஐதராபாத்தின் பழமையான நிஜாமுத்தீன் மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கலந்துகொண்டார் அதன்பின்பு பேசிய அவர்
நம் நாட்டில் அநீதியான பல விசயங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. அது தொடர்பாக எனக்கு தினமும் பல அழைப்புகள் வந்தபடியே உள்ளன. நாம் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம். நமது கடைகளும், வீடுகளும் தகர்க்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. நாம் பயந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். நாம் கவலைப்படுவதாக சிலர் சொல்கிறார்கள்.நான் இங்கு உங்கள் முன் ஒன்றை சொல்கிறேன்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அலையை பாஜக கொண்டுவந்துள்ளது. ஆனால், நீங்கள் அமைதியாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும்.
இந்த அநீதியை சட்டப்படி நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். நாம் ஆயுதங்களை எடுக்கவேண்டுமென நம்மை பாஜக ஒடுக்க நினைக்கிறது.
அதிர்ச்சியடையாமல் இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். இந்தியாவில் அரங்கேறிக் கொண்டு இருக்கும் சம்பவங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளாகும். ஒருபோதும் தைரியத்தை இழக்காதீர்கள். நாங்கள் உங்கள் அடக்குமுறைகளை கண்டு அஞ்சவில்லை. எங்கள் பொறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். களத்தைவிட்டு செல்ல மாட்டோம்." எனக்கூறிய அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுதார்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி