Breaking News

காங்கிரசில் இணைய மறுத்ததற்கு காரணம்..என்ன! – பிரஷாந்த் கிஷோர் விளக்கம்

அட்மின் மீடியா
0

காங்கிரஸில் இணைய மறுத்தது குறித்து தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

 


இந்த ஆண்டு இறுதியில் ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலும், வரும் 2024-இல் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சரிவில் இருந்து மீட்டெடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச் செய்வது தொடர்பான வரைவு திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வழங்கினார் அறிக்கை ஒன்றை அளித்திருந்தார்.

இதற்கிடையே காங்கிரஸில் சேரவும், அதிகாரம் பெற்ற குழுவில் இணையவும் சோனியா காந்தி அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது

காங்கிரஸ் கட்சியில் இணையவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க விடுக்கப்பட்ட கோரிக்கையை நான் மறுத்துவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே முக்கியம்.கட்சிக்குள் அழமாக வேரூன்றி இருக்கும் அடிப்படை கட்டமைப்பிற்குள் உள்ள பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 


 

Tags: அரசியல் இந்திய செய்திகள்

Give Us Your Feedback