கர்நாடகாவில் திருக்குரான் வசனத்துடன் தொடங்கிய கோவில் தேர் திருவிழா... வைரல் வீடியோ
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூரில் அமைந்திருக்கும் சென்னகேசவா கோவிலில் தேர் திருவிழாவில் பாரம்பரிய முறைபடி குரான் ஓதும் நிகழ்வு நடைபெற்றது
வழக்கமாக தேர் புறப்படுவதற்கு முன், இஸ்லாமியர்களின் புனித நுாலான குரானில் இருந்து சில வாசகங்கள் ஓதப்படுவது வழக்கம். அதன்படி, தேர் புறப்படுவதற்கு முன், இஸ்லாமிய மத குருவான காஜி சையது சஜீத் பாஷா என்பவர், குரானில் இருந்த வாசகங்களை ஓதினார். அதன்பின்பு கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தர்காவுக்கு கரகமும் எடுத்துச் செல்லப்பட்டது
கொரோனாகாரணமாக, இரண்டு ஆண்டுகளாக தேர் திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில், தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் விவகாரம், கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்ய தடை,ஹலால் இறைச்சி பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்தன.
இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள ஒரு கோவிலில் திருக்குரான் வசனத்துடன் திருவிழாவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தேர் திருவிழாவில் கலந்து கொண்ட முஸ்லிம் மத குரு கூறுகையில்,
கர்நாடகத்தில் எந்த மாவட்டத்திலும் இதுபோன்று ஒரு நிகழ்வு வழக்கத்தில் இல்லை. இந்த நிகழ்வு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை மக்கள் ஒற்றுமையாக மத நல்லிணக்கத்துடன் நடத்தும் நிகழ்வு ஆகும்'' என பெருமையாக கூறினார்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி