Breaking News

மைலேஜ் கொடுக்காததால் ஓலா பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிசியோதெரபி மருத்துவரான பிரித்திவிராஜ் கடந்த ஜனவரி மாதம் 1,40,000 ரூபாய் கொடுத்து ஓலா பைக்கை வாங்கினார். 



வாகனத்தை பதிவு செய்ய ஓலா நிறுவனத்தாரால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்துள்ளார் குடியாத்தம் RTO-ல் பதிவு செய்துகொள்ளசெலும் போது  ஓலா பைக் பழுதாகி நின்றிருக்கிறது. 

இதனையடுத்து ஓலா சர்வீஸ் சென்டரை அழைத்து பைக்கை சரி செய்ய சொல்லி காலை 10.30 மணியளவில் புகார் கொடுத்திருக்கிறார்.ஆனால் மதியம் இரண்டு மணி ஆகியும் ஓலா நிறுவனம் தரப்பில் இருந்து எவருமே வாகனத்தை சரி செய்ய வரவில்லை எனக் கூறி மருத்துவர் பிரித்திவிராஜ் வீடியோ வெளியிட்டார். 

ஏற்கெனவே இது போன்று ஓலா பைக் பழுதாகி வந்தது வழக்கமாகியிருக்கிறது.ஸ்கூட்டரை வாங்கும்போது ஓலா நிறுவனம் 180 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என்று கூறியதாகவும், தற்போது 50 கிலோ மீட்டர்கூட தரவில்லை என ஆத்திரமடைந்த மருத்துவர் பிரித்திவிராஜ் பழுதான ஓலா பைக் மீது பெட்ரோலை ஊற்றி எரித்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மைலேஜ் சரிவர கொடுக்காததால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எரித்த உரிமையாளர்பதிவு: ஏப்ரல் 26, 2022 20:42 ISTமாற்றம்: ஏப்ரல் 26, 2022 21:31 ISTஸ்கூட்டரை வாங்கும்போது ஓலா நிறுவனம் 180 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என்று கூறியதாகவும், தற்போது 50 கிலோ மீட்டர்கூட தரவில்லை என்றும் உரிமையாளர் புகார் கூறி உள்ளார்.மைலேஜ் சரிவர கொடுக்காததால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எரித்த உரிமையாளர்தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஆம்பூர்:ஆம்பூர் அருகே மைலேஜ் சரிவர கொடுக்காததால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதன் உரிமையாளர் பெட்ரோல் ஏற்றி எரித்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சாமியார்மடத்தைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். பிசியோதெரபி மருத்துவரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி உள்ளார். 


வீடியோ:-

https://www.youtube.com/shorts/dzQarSxkQ6k

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback