இந்த மாவட்டத்தில் தொடர்சியாக 5 நாட்கள் விடுமுறை...முழு விவரம்....
அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வருகிற 18-ந் தேதி நடக்க உள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு மற்றும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளித்தேர்வுகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனை ஈடுசெய்யும் பொருட்டு மே 7-ந் தேதி சனிக்கிழமை அன்று முழு வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.
14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு
15 ஆம் தேதி புனித வெள்ளி
16 ஆம் தேதியும்(சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
17ம் தேதி ஞாயிற்றுகிழமை விடுமுறை
18 ம்தேதி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா விடுமுறை
Tags: தமிழக செய்திகள்