இனி கல்லூரிகளில் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு…படிக்கலாம்....யூஜிசி அறிவிப்பு
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்று பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிப்பதற்கான அறிவிப்பை பல்கலைக் கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று வெளியிட்டார்.
அதில் புதிய தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டபடி, மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளை பெறுவதற்கான கல்வித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி,
மாணவர்கள் ஒரே பல்கலைக் கழகத்திலோ அல்லது இரு வேறு பல்கலைக் கழகங்களிலோ ஒரே நேரத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்.
ஒரே நிலை படிப்புகளை மட்டுமே இரண்டாக சோ்த்து படிக்க முடியும். அதாவது, இரண்டு இளநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு முதுநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு பட்டயப் படிப்புள் என்ற வகையில் மட்டுமே ஒரே சமயத்தில் படிக்க முடியும்
மாணவர்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள இது வகை செய்யும்,’ என்று கூறியுள்ளார்.
Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்