தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் 11 பேர் உயிரிழப்பு.... முழு விவரம்
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் விமர்சையாக சித்திரை திருவிழா களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்தில் நடைபெறும்.
இந்த வருடமும் அப்பர் குருபூஜையையொட்டி சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெற்றது இந்த விழாவில் தேர் நள்ளிரவில் இழுக்கப்பட்டு அதிகாலை 3 மணி வரை நிகழ்வு நடைபெறும்
சுமார் 15 அடி உயரம் கொண்ட பல்லக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்தார்.தஞ்சை பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிழந்துள்ளதாகவும்,10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,விபத்துக்கான காரணம் குறித்து அறிய விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர்,காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்
தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேடு பகுதியில் முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்
இந்நிலையில்,களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.Tags: தமிழக செய்திகள்