Breaking News

மாணவ மாணவிகளே 11, 12-ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு நேரம் அதிரடி குறைப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.



11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது.

மேலும், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் மே 2 வரை நடைபெறவுள்ளது. எப்போதும் செய்முறைத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தற்போது மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய காரணத்தினால் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

Give Us Your Feedback