FACT CHECK பாகிஸ்தானில் மதம் மாற சொல்லி கரண்ட் ஷாக் கொடுத்தார்களா?? பரவும் வீடியோவின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாக்கிஸ்தானில் இஸ்லாமிய மதம் மாற்ற மின்சார ஷாக் கொடுக்கப்படும் இந்து பெண் குழந்தை.இதை பார்க்கும் போது நமது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கின்றது.விலங்குகளை விடவும் கேவலமான இந்த மிருகங்களை என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை. இஸ்லாமிய காட்டு மிராண்டிகள் உலகின் சாபக்கேடுகளாவார்கள்.என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யப்படும் வீடியோவில் உள்ள நபர் பாகிஸ்தானில் உள்ள ஒரு இஸ்லாமியர் , மாந்திரீகர், பேயோட்டுதலும் செய்து வரும் ஹாஜி முகமது உல்லா என்பவர் ஆவார்
மேலும் அவர் தனியாக யூடியூப் சேனலும் பேஸ்புக் பேஜ்ஜும் வைத்துள்ளார் அவரது யூடியுப்பிலும், பேஸ்புக்கிலும் பல பேயோட்டும் வீடியோக்கள் உள்ளன,
பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள நபரும் கீழே உள்ள யூடியூபில் உள்ள நபரும் ஒருவே என பார்க்கும் போதே தெரிகின்றது
மேலும் அவர் மீது இஸ்லாத்தில் இல்லாத சொல்லாத பல வேலைகளை அவர் இஸ்லாமிய பெயரில் பொய்யாக செய்துவருகின்றார் என அவர் மீது தொடர்சியான புகார் வந்தது, மேலும் 12 வயது சிறுவனை பேய் ஓட்டுகின்றேன் என கரண்ட் ஷாக் கொடுத்தார் என வந்த புகாரை அடுத்து கடந்த 2020 ம் ஆண்டு அவர் பாகிஸ்தானில் உள்ள பெஷாவார் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது போலிசார் அவரது யூடியூப் சேனலை முடக்கிவிட்டார்கள்.
ஆனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தும் அதே பணியை மீண்டும் தொடர்கின்றார் என அவரது யூடியூப் சேனலை பார்த்தால் தெரிகின்றது.
மேலும் பலரும் ஷேர் செய்யும் வீடியோவுடன் ஒரு தகவலையும் ஷேர் செய்கின்றார்கள் அதாவது மதமாற்றம் செய்ய அந்த இந்து பெண்ணுக்கு கரண்ட் ஷாக் அளிக்கின்றார்கள் என ஆனால் அதும் பொய்யான தகவல என ஆல்ட் நியூஸ் பேக்ட் செக் செய்தி வெளியிட்டுள்ளது
அதில் அவர் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை, அவரிட,ம் வரும் நபர்களுக்கு பேயோட்டி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்கள் அவர் மதமாற்றம் செய்யவில்லை என இதில் இருந்து தெரிகின்றது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/channel/UCfkxzAmFkeMramALRISUzPg/videos
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
