பள்ளி வாகனங்களில் இதெல்லாம் கடைபிடிக்கவேண்டும் - முதன்மை கல்வி அலுவலர்
பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில்
முறையாக பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள நபர்களை நியமிக்க வேண்டும்,
மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும்,அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வானகத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும்.
பள்ளி வாகனத்தின் முன்னும், பின்னும் பள்ளி வாகனம் என்ற பெயரில் என்று பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பள்ளி வாகனம் பள்ளி பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
அதில் முதலுதவி பெட்டி கண்டிப்பாக இடம்பெறவேண்டும். அதேபோல் தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
பள்ளி வாகனங்களில் மாணவர்களை அதிக அளவில் ஏற்றக்கூடாது.
பள்ளி வாகனங்களை ஆண்டு தோறும் முறையாக பராமரித்து உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.
Tags: தமிழக செய்திகள்