பைக்க்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகல குதிரையில் வேலைக்கு செல்லும் நபர் வீடியோ
மஹாராஷ்டிராவில் பெட்ரோல் விலை உயர்வால் ஷேக் யூசூப் என்பவர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக குதிரையில் பணிக்கு செல்பவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரைச் சேர்ந்தவர் ஷேக் யூசுப். வீட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார்.கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கில் பல நாட்கள் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தாததால் கோளாறாகி விட்டது.
மேலும் அதனை ரிப்பேர் செய்து தினமும் பெட்ரோல் போட்டு கட்டுபடியாகதால் அந்த பைக்கை விற்று 40 ஆயிரம் ரூபாய்க்கு குதிரையை வாங்கி, தினமும் அதில் வேலைக்கு சென்று வருகிறார்.
தற்போது தினமும் குதிரையில் தான் பணிக்கு வருகிறார். சாலையில் இதர வாகனங்களுடன் இவர் குதிரையில் வருவதை ஏராளமானோர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அடுத்து, இவர் பிரபலமாகி விட்டார்
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்