தமிழக அமைச்சரவையில் இரு இலாகாக்கள் மாற்றம் - ஆளுநர் மாளிகை அறிவிப்பு
தமிழக அமைச்சரவையில் இரு இலாகாக்கள் மாற்றம் - ஆளுநர் மாளிகை அறிவிப்பு
போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை இலாகாக்கள் மாற்றம்
போக்குவரத்துத் துறை அமைச்சராக சிவசங்கர் நியமனம்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நியமனம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இரண்டு இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ன.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கரனிடம் போக்குவரத்துத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பிறகு சுமார் 10 மாதங்கள் கழித்து முதன்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்