Breaking News

அதிர்ச்சி: ஈபிள் டவர் மீது ஏவுகனை தாக்குதல்...உக்ரைன் வெளியிட்ட கிராபிக்ஸ் வீடியோ...

அட்மின் மீடியா
0

உக்ரைன் மீது இன்று ரஷ்யா தனது 18வது நாள் தாக்குதலை துவக்கியுள்ளது, ரஷ்யா தனது முப்படை ராணுவத்தை முழு அளவு உபயோகித்தும் இன்னும் உக்ரைனை வீழ்த்த முடியவில்லை, உக்ரைனின் பதில் தாக்குதல் அந்த அளாவிற்க்கு உள்ளது, மேலும் போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது

இந்நிலையில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோவில், 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் டவர் முன்பு ஒரு பெண் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈஃபிள் டவர் மற்றும் அங்கிருந்த கட்டிடங்கள் விழுந்து நொறுங்குகின்றன. 

வீடியோ முடிவில் ஐரோப்பிய நாட்டின் தலைநகருக்கு இந்த நிலைமை ஏற்படுவதை எண்ணிப் பாருங்கள். இவ்வாறு நடந்துவிட கூடாது என்று தான் நாங்களும் நினைக்கிறோம். உக்ரைன் வான் எல்லைகளை மூடுவதாக அறிவியுங்கள். இல்லையெனில், உக்ரைனுக்கு வான் போர் வீரர்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் வீழ்ந்தால் நீங்களும் வீழ்ந்ததாகவே அர்த்தம்" என அதில் எழுதப்பட்டுள்ளன. 

இது, கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறிய வார்த்தைகள் ஆகும்.நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக இந்த கிராஃபிக்ஸ் வீடியோவை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.


https://twitter.com/taazatv/status/1502600735758127111

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback