Breaking News

பேருந்து நிறுத்தும் உணவங்களில் இந்த வழிமுறைகள் கட்டாயம் -அரசு போக்குவரத்து கழக நிபந்தனைகள் வெளியீடு!

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் (இரண்டு உறை முறையில்) அதற்கான படிவத்தில் கோரப்படுகின்றன. ஒப்பந்தப்படிவம் 19/03/2022 முதல் 27/04/2022 வரை பெற்றுக் கொள்ளலாம்.



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.

அரசுப் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும், மேலும் 

சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும்.

கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.

உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்

பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும் போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும் படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்உணவகத்திற்கு மின் இணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்

உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.

உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் M.R.P., விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் உணவில் வாங்கும் பொருட்களுக்கும் கணனி மூலம் இரசீது தர வேண்டும்.

உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

பேருந்துகள் உணவகத்தில் உள்ளே சென்று வெளியே வருவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விதித்துள்ளது.


மேலும் விவரங்களுக்கு:-

http://www.tenders.tn.gov.in/pubnowtend/uploaded/TD_civ193264_new%20motel%20tender%20form2022.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback