ஆவடி காவல் ஆணையரின் புதிய முயற்சி இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை....
அட்மின் மீடியா
0
ஆவடி மாநகராட்சியில் பெண் காவல் அதிகாரிகள் தலைமையில் இன்று 25 காவல் நிலையங்கள் செயல்பட உள்ளன.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் சீருடை அணிந்த சேவையில் மகளிரின் பங்கை அங்கீகரித்து கௌரவிக்கும் விதமாக இன்று மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறது. இன்று ஆவடி காவல் ஆணையர் , அதற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் இணை ஆணையர் துணை ஆணையர் அலுவலகங்களின் செயல்பாடுகளுக்கு, தலைமை தாங்க உள்ள பெண் அதிகாரிகள் காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.