பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம் முழுவிவரம்...
அட்மின் மீடியா
0
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள பேரறிவாளன் ஜாமின் கோரிய வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது
விசாரணையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது மேலும் ஏற்கனவே பேரறிவாளனுக்கான மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையில் இருந்து விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கூறியது
அதன் பின்பு பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
இந்நிலையில் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்