பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களுக்கு ரஷ்யா தடை
ஃபேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டரும் ரஷ்யாவில் முடக்கப்பட்டுள்ளது!மேலும், ரஷ்யப் படைகள் குறித்து பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையிலான புதிய சட்டத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ரஷியாவில் பேஸ்புக் மற்றும் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ரஷிய அரசு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதால் ரஷியாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
.ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில், உலகத் தலைவர்கள், செய்தி நிறுவனங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். அப்போது, புதினுக்கு எதிரான கருத்துக்களும், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், போரைப் பற்றி விமர்சித்தும் பலர் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்