ரேஷன் கடையில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும் பொருட்கள் வழங்கப்பட்டும்
தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தனிநபர் குடும்ப அட்டை வழங்கப்படுமா, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகைகள் பொருந்தாத காரணத்தினால் பொருட்கள் வழங்கும் பிரச்சினைகள் நிலவுவதாக கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி யாரையும் சாராத தனியாக சமைத்து வாழ்வை நடத்தும் தனிநபர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 19 லட்சத்து 71 ஆயிரத்து 807 தனிநபர் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.ration shopஆட்சி பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்து 92 ஆயிரத்து 604 குடும்ப அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும், பிராக்சி முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு நிவர்த்தி செய்யபடும் என்று உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்