பாம்பு தீவில் சரணடைய மறுத்ததால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிருடன் உள்ளனர்? வீடியோ.....
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 6-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
இதற்கிடையில், கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் பாம்பு தீவில் கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது, அப்பகுதிக்கு வந்த ரஷிய போர் கப்பலின் கேப்டன் தீவில் உள்ள உக்ரைன் வீரர்களிடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கூறினார். ஆனால் சரணடைய மறுத்த உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது ரஷிய போர் கப்பல் தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் வீரர்கள் 13 பேரும் வீர மரணமடைந்ததாக கூறப்பட்டது.இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், பாம்பு தீவில் ரஷிய படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட உக்ரைன் வீரர்கள் 13 பேரும் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷிய படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் திரும்ப பதில் தாக்குதல் நடத்தியதாகவும் மேற்கொண்டு சண்டையிட ஆயுதங்கள் இல்லாததால் வீரர்கள் சரண் அடைந்ததாகவும் உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
சரண் அடைந்த உக்ரைன் வீரர்களை ரஷிய படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா பகுதிக்குகொண்டு சென்று கைதிகளாக அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷிய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் தற்போது நலமுடன் உள்ளதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
https://twitter.com/consciousphilos/status/1497512648321208323
Western propaganda says that all Ukrainian soldiers on Snake Island are dead. But here they are alive and well. Russians are giving them water and food (from what I've seen) pic.twitter.com/oepPWjbxUH
— Conscious Philosopher (@consciousphilos) February 26, 2022
Tags: வெளிநாட்டு செய்திகள்