Breaking News

சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட 4 நிர்வாகிகளை அதிமுகவிலிருந்து நீக்கி ஓபிஎஸ் - இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் நீக்கம் 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வி.கே.சசிகலாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேற்று சந்தித்து பேசினார். சசிகலாவை அதிமுகவின் இணைக்க வேண்டும் என குரல் எழுந்த நிலையில், நேற்று திருச்செந்தூர் சென்றிருந்த சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் சந்தித்து பேசினார். தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் எஸ்.முருகேசன், வைகை கருப்புஜி, எஸ். சேதுபதி ஆகியோர் கட்சிக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளனர்.

அதேபோல் மேலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணங்களால்  தேனி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

 
 
 
 

  
 
 
 




 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback