Breaking News

TNPSC குருப் 4 தேர்வு என்றால் என்ன! பணிகள் என்ன!! கல்விதகுதி என்ன! முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் தேர்வுகள் நடத்தப்படும் 



குரூப் -1 பிரிவில் 

தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

குரூப் -2 பிரிவில் 

சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.

குரூப் 4 பிரிவில்

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி:-

இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை.  இந்நிலையில் இன்று குருப் 4 தேர்வு அறிவிப்பு வெளியாகவுள்ளது

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback