உலகில் மிகப்பெரிய இந்து கோவில் கட்டுவதற்கு ரூ. 2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்!
தற்போது உலகில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில்தான் உலகில் மிகபெரிய இந்து கோவில் ஆகும் இது 215 அடி உயரமுள்ளது மேலும் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும்
ஆனால் தற்போது அதனை விட மிகப்பெரிய கோவில் பீகார் மாநிலத்தில் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அதற்க்கான நில கையகப்படுத்துதலில் அங்கு இஷ்தியாக் அகமது கான்,குடும்பத்தினர் இடமும் உள்ளது, அவரிடம் கோவில் கட்ட உங்கள் இடம் வேண்டும் என மகாவீர் மந்திர் அறக்கட்டளையினர் கேட்டதற்க்கு சுமார் 2.5 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை தானமாக கோவில் கட்ட கொடுத்துள்ளார்கள்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் அவர்கள்
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர் இஷ்தியாக் அகமது கான்,குடும்பத்தினர் எங்களுக்கு கோவில் கட்ட . நிலத்தை நன்கொடையாக வழங்கினர். பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை நன்கொடையாக அளித்தது தொடர்பான அனைத்து சம்பிரதாயங்களையும் கான் முடித்துள்ளார் என்றார்
மேலும் கான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த நன்கொடை சமூக நல்லிணக்கம் மற்றும் இரு சமூகங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆச்சார்யா கூறினார்.
Tags: இந்திய செய்திகள்