12,13,14 வயது சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி மத்திய அரசு அறிவிப்பு
12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதியில் இருந்து, 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்பின்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல், 45 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
அதற்க்கு பின்பு 18 வயதை தாண்டியவர்களுக்கு மே 1-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
தற்போது 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை செய்தது அதனை தொடர்ந்து நாளை முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குகோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தப்படும்.என மத்திய அரசு அறிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்