Breaking News

வேலை முடித்து தினமும் இரவில் 10 கிலோமீட்டர் ஓடும் இளைஞர்!!! அவர் சொன்ன காரணம் !!! இதுக்கு பெயர் தான் தன்னம்பிக்கை

அட்மின் மீடியா
0

  ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்திற்காக, பணி செய்யும் இடத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள வீடு வரை, தினமும் நள்ளிரவு ஓட்டப்பயிற்சிமேற்கொள்ளும் 19 வயது இளைஞரின் 'வீடியோ'வை, சமூக வலைதளத்தில் பல லட்சம் பேர் பார்வையிட்டு, வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோடா பகுதியை சேர்ந்தவர் பிரதீப் மெஹ்ரா( 19) பிரதீப் மெக்டொனால்டு ஊழியர் ஆவார். தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்பும் போது பிரதீப் மெஹ்ரா தினமும் 10 கிமீ ஓடி உடலை வலிமையாக்க பயிற்சி எடுத்து வருகின்றார்

தினமும், இரவில் பணி முடித்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டுக்கு, நள்ளிரவில் ஓடி திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற, 'பாலிவுட்' திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான வினோத் கப்ரி நள்ளிரவில் காரில் செல்கையில், இந்த இளைஞர் வேகமாக ஓடி செல்வதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். இளைஞரின் வேகத்துக்கு இணையாக காரை ஓட்டியபடியே, அவருடன் பேச்சு கொடுத்தார். 

நள்ளிரவில் இத்தனை வேகமாக ஓடி எங்கே செல்கிறீர்கள்; காரில் ஏறுங்கள் நான் இறக்கி விடுகிறேன்' என வினோத் கூறினார்.இதை மறுத்த பிரதீப், 'ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என் லட்சியம். அதற்கு பயிற்சி எடுப்பதற்காகவே, தினமும் இப்படி ஓடுகிறேன். நள்ளிரவில் மட்டுமே, அதற்கு நேரம் கிடைக்கிறது' என பதில் அளித்தார். 

பிரதீப் உடனான இந்த உரையாடலை, தன் 'மொபைல் போனில்' படம் பிடித்த வினோத் கப்ரி, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதை, 12 மணி நேரத்தில், 38 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். 1.53 லட்சம் பேர், 'லைக்' குறியிட்டுள்ளனர்.இந்த வீடியோ, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'டிரெண்டிங்' ஆகிஉள்ளது.

நமக்கு நாம் கொடுக்கும் தன்னம்பிக்கை தான் வாழ்வை வெற்றி பெற எப்போதும் நிலைத்து நிற்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தளராத மனமும், விடாமுயற்சியும் இருப்பவர்களை தோல்வி ஒருபோதும் நெருங்குவதில்லை.

இந்த உலகத்தில் முடியாது என்று எதுவுமே இல்லை. சரியான திட்டமிடலில் இருக்கிறது வெற்றியின் ரகசியம். நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வோம்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/vinodkapri/status/1505535421589377025


Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback