சவுதிஅரேபியாவில் வாட்ஸ் அப்பில் Heart Emoji அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை..! முழு விவரம்....
வாட்ஸ் அப் செயலியில் சிவப்பு நிற இதய குறியீடான ஹார்ட் எமோஜி அனுப்பி பாலியல் ரீதியாக எவரேனும் தொந்தரவு செய்து, இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சவூதி அரேபியாவில் புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது
சவுதி அரேபியாவின் மோசடி தடுப்பு சங்கத்தின் உறுப்பினரான அல் மோடாஸ் குட்பி அந்நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வாட்ஸ்அப்பில் ஹார்ட் இமோஜியை அனுப்புவது பாலியல் தொல்லை குற்றத்திற்குச் சமம். சில குறிப்பிட்ட படங்கள் மற்றும் இமோஜிகளை சாட் செய்யும் போது பயன்படுத்துவது பாலியல் குற்றமாகவே கருதப்படும். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தால், இது போன்ற மேசெஜ்களை அனுப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என கூறியதாக செய்தியினை gulf news செய்தி வெளியிட்டுள்ளது
அதன்படி ஒரு நபர் சமூக வலைதளங்களில் சேட்டிங் செய்யும் போது எதிரே பேசுபவர் அனுமதியின்றி பாலூனர்வை தூண்டும் விதமான டெக்ஸ்ட்களை பகிர்ந்தால் அதற்கு தண்டனைகளை அறிவித்துள்ளது. அதன்படி மற்றவர் அனுமதியில்லாமல் ஹார்ட், கிஸ், லிப்ஸ் போன்ற எமோஜிகளை அனுப்பி அதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தார். அதை அனுப்பியவருக்கு ஒரு லட்சம் திராம்ஸ் அதாவது இந்திய பண மதிப்பில் ரூ20.5 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை என அறிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்