BREAKING: 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
மேலும் 200க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர் சிறைபிடிக்கபட்டுள்ளார்கள்,எனவும் ரஷ்யாவின் 146 டாங்கிகள் , 27 போர் விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போர் தொடங்கிய 4 நாட்களில் ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
Tags: வெளிநாட்டு செய்திகள்