Breaking News

ரஷ்ய வீரனிடம் உக்ரைன் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை என கேட்ட சிங்கபெண் வீடியோ

அட்மின் மீடியா
0

தற்போது உலகம் முழுவதும் வைரலாக பலரும் ஷேர் செய்யும் வீடியோ ரஷ்ய வீரனிடம் உக்ரைன் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை என கேட்ட சிங்கபெண் வீடியோதான்

 

அந்த வீடியோவில் 

உக்ரைன் பெண்:-

ஆயுதம் ஏந்திய ரஷிய வீரரைப் பார்த்து, "நீங்கள் யார்?" எனக் கேட்கிறார். 

ரஷ்ய வீரர்:-

 எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்" எனக் கூறுகிறார்.

உக்ரைன் பெண்:-

பாசிசவாதிகளே... இங்கே உங்களுக்கு என்ன வேலை?" என்று மீண்டும் அந்தப் பெண் உக்கிரமாகப் பேசுகிறார். 

ரஷ்ய வீரர்:-

நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்" எனக் கூறுகிறார்.

உக்ரைன் பெண்:-

உங்கள் பாக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்பட்டு உக்ரைனில் புதைக்கப்படும் போது அந்த விதையாவது வளரட்டும் என்று கூறி விட்டு செல்கிறார். 

சூரியகாந்தி மலர் உக்ரைன் நாட்டின் தேசிய மலர் ஆகும்.

 



வீரப்பெண்மணி வீடியோ பார்க்க:-

https://twitter.com/ukraine_world/status/1496866811110834176

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback