Breaking News

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் - நாளை வாக்கு எண்ணிக்கை

அட்மின் மீடியா
0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 



வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காலை 8 மணிக்கு தயார் நிலையில் இருக்கும்.முதல் கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

அதன்பின்பு தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டு, அதில் தனித்தனி அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலுள்ள அறிவிப்பு பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்யப்படும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback