முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!
.அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான 2வது வழக்கில் ஜாமின் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அச்சமயத்தில், சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான 2வது வழக்கில் ஜாமின் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் புழல் சிறையில் தொடர்ந்து இருக்கும் நிலை உள்ளது.
Tags: தமிழக செய்திகள்