Breaking News

விவோவின் அடுத்த தயாரிப்பு ட்ரோன் கேமரா ஸ்மார்ட்போன்...அட நிஜமாதாங்க... வீடியோ பாருங்க....

அட்மின் மீடியா
0

சீனாவின் முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ டிரோன் செயல்பாடுகள் கொண்ட பறக்கும் கேமரா தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போனில் வழங்க திட்டமிட்டுள்ளது.




இது ஸ்மார்ட்போனிலிருந்து பிரிக்கப்பட்டு, காற்றில் பறந்து வான்வழி படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. விவோ நிறுவனம் 2020 டிசம்பரில், இந்த ஸ்மார்ட்போனுக்கான காப்புரிமையை உலக அறிவுசார் சொத்து அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. 


இந்த பறக்கும் ஸ்மார்ட்போனில் உள்ள புதுவிதமான கேமராவை பறக்க வைக்கநான்கு (4 propellers) புரோப்பல்லர்கள்வழங்கி உள்ளன.இதற்கென தனியாக பேட்டரியும் வழங்கப்படுகிறது.இந்த பறக்கும் கேமரா மாடலில் மூன்று infrared proximity கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள இந்த புதிய தொழில்நுட்பம் சந்தையில் வர மேலும் சில ஆண்டுகள் ஆகும்.

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=oFf06MPmCNc


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback