ரஷ்யா உக்ரைன் போருக்கு காரணமான நேட்டோ என்றால் என்ன? உக்ரைன் நேட்டோவில் சேர ரஷ்யா ஏன் தடுக்கின்றது....
நேட்டோ என்றால் என்ன ?
The North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கம்தான் NATO. அதாவது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு என்பது தான், இதன் தமிழாக்கம்.
அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல் ஆகிய 12 நாடுகள் சேர்ந்து 1949-ல், உலகப் போருக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட, ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் இந்த நேட்டோ.
இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீதும் ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.
இந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இணைவதன் மூலம் இக்கட்டான சூழலில் நேட்டோ ராணுவ உதவிகளை பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன.நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அல்லது நேட்டோவுடன் அனுசரணையாக நடந்து கொள்கிற நாடுகள் மீது பிறநாடுகள் தாக்குதல் நடத்தினால் 12 நாடுகளின் ராணுவம் கூட்டாக களமிறங்கும் என்பது அதன் கொள்கை
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்த உக்ரைன், 1991 இல் பிரிந்து தனி நாடானது.
ஆனால்அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. ஆனால் நேட்டோவில் உக்ரைன் சேர ரஷ்யா விரும்பவில்லை, அப்படி சேர்ந்தால் உக்ரைனை ரஷ்யாவில் இணைக்கமுடியாது என கருதிய ரஷ்யா அதன மீது போர் தொடுத்துள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்