Breaking News

வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாகூர் தர்கா: அலுவலகத்திற்க்கும் சீல் வைப்பு

அட்மின் மீடியா
0

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் பரம்பரை அறங்காவலர்கள் 8 பேர் நிர்வகித்து வந்தார்கள்.



இந்த நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்ததை அடுத்து, தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மற்றும் முரண்பாடு காரணமாக, கடந்த 2017 ஆண்டு  நீதிமன்ற த்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் 4 மாதங்கள் மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்ப்ட்டார்கள்

இந்நிலையில் 4 மாதங்கள் மட்டும் நியமிக்க அதிகாரிகள் கடந்த 4 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளார்கள் நாகூர் தர்ஹா நிர்வாகத்தை 4 மாதங்களுக்கு மட்டும் கவனிக்க நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாகக்குழு 4 ஆண்டுகளாக பதவியில் தொடருவது ஏன் என்றும், அந்த நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நாகூர் தர்ஹா நிர்வாகத்தை வக்ஃபு வாரியம் கையி்ல் எடுக்க உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இடைக்கால நிர்வாகிகள் பொறுப்புகளை ஒப்படைக்காத நிலையில் நாகூர் தர்கா அலுவலகத்திற்க்கு  வந்த தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர்கள் இடைக்கால நிர்வாகிகள் பயன்படுத்திய கோப்பு அலமாரிகள், பாதுகாப்பு பெட்டகம், அவர்களின் அறை உள்ளிட்டவைகளைபூட்டி சீல் வைத்தனர்.

மேலும், நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட்ட இடைக்கால நிர்வாகிகள் அலுவல் பணிகள் மேற்கொள்ள தடை விதித்ததுடன், தர்கா நிர்வாகத்தை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் கொண்டு வர வக்பு வாரிய ஆய்வாளர் ஒருவரை நியமனம் செய்துள்ளனர்.

தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு உள்ளாகி நீக்கம் செய்யப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகிகள் அக்பர் மற்றும் அலாவுதீன் ஆகியோர் பதவி வகித்த காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து, வக்பு தர்கா மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback