Breaking News

மேலூரில் பரபரப்பு... இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொல்லிய பாஜக பூத் ஏஜென்ட்...!

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது.
 
 

இந்நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் அகற்ற கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதன் காரணமாக அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.அதன் பின்பு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜனை வாக்குப்பதிவு மையத்திலிருந்து பாதுகாப்பு போலீசார் வெளியேறிய பின்னரே வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியிருக்கிறது.இந்த சம்பவத்தையடுத்து அல் அமீன் பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback