Breaking News

ரஷியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது......போர் நிறுத்தம் ஏற்படுமா!!!

அட்மின் மீடியா
0

உக்ரைனில் ரஷிய படைகள் இன்று 5வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அமைச்சரகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. இதனால் உக்ரைனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா நேற்று உத்தரவிட்டது.

அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா மீண்டும் அழைப்பு விடுத்தது.அதனை தொடர்ந்து ரஷியாவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் குழு பெலாரஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளது.

அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,அதை இன்று ஏற்பதாக தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,உக்ரைன் ரஷ்யா இடையே இன்று பெலாரஸ்-இல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை பெலாரஸ் அரசு மேற்கொண்டுள்ளது



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback